20 வகை பிரதோஷங்களும் அதன் பலனும்

pradosham

சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில்  வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும்  [புத்தியும் நன்றாகும்]

 மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் உண்டு. அவற்றையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.
  தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்]  செய்வது உத்தமம் ஆகும்.

3. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை]  செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர  கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர்,  சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம்.  இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

 தென்னாடுடைய  சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

16ம் பெற்று பெரு வாழ்வும் வாழ்க

sakthi

1.கலையாத கல்வி
2.நீண்ட ஆயுள்
3.வஞ்சகம் இல்லாத நட்பு, நண்பர்கள்
4.நிறைந்த செல்வம்
5.என்றும் இளமை
6.நோயற்ற உடல்
7.சலிப்பற்ற மனம்
8.அன்பு நீங்காத மனைவி / கணவன்
9.குழந்தைப் பேறு
10.குறையாத புகழ்
11.சொன்ன சொல்லைக் காப்பாற்றும் தன்மை
12.பிறருக்குக் கொடுக்கும் எண்ணம், அப்படிக் கொடுப்பதற்குத் தடைகள் இல்லாத சூழ்நிலை
13.நிலைத்த செல்வம்
14.நேர்மையாக ஆட்சி செய்யும் அரசன் (தான் நேர்மையாக வாழ விரும்பும் உள்ளம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்)
15.துன்பம் இல்லாத வாழ்க்கை
16.கடவுள் மேல் நீங்காத அன்பு 

 
 ஆகிய 16 செல்வங்களும் அனைவருக்கும்இந்த விஜயதசமி திருநாளில் கிடைக்க   அன்னை ஆதி பரா சக்தியை அடியேன் பிரார்த்திக்கிறேன். 

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதியார். உழவுக்கு வந்தனை செய்யும் திருநாள் பொங்கல். தொழிலுக்கு வந்தனை செய்யும் திருநாள் ஆயுத பூஜை. வழக்கம் போல் வீட்டில் தொழில் சம்பந்தப்பட்ட விடயங்கள்,  அறிவு வளர்க்கும் புஸ்தகம் மட்டுமின்றி உடலில் வலுவை வளர்க்கும் கர்லா கட்டை, தம்பில்ஸ் அனைத்தையும் சரஸ்வதியின் முன் வெய்த்து சரஸ்வதியின் ஸ்லோகங்களில் தலைசிறந்த ஸ்லோகமான சகலகலா வல்லி மாலை கூறி அடியேன் வழிபட்டேன்.

சொற்விற்பன்னமும்,  அவதானமும், கல்வி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!ayutha pooja
 

15 லக்சம் பழமையான கல்லாலான கோடாரிகள் தமிழகத்தில்.

ancient tamil

15 லக்சம் பழமையான கல்லாலான கோடாரிகள்  தமிழகத்தில்.

 15 லக்சம் ஆண்டுகள் பழமையான கற்கோடாரிகள்  தமிழகத்தில்  சுமார் ஒரு 150 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர்    அது என்ன? காரணத்தினாலோ வெளியில் தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.  இதை தகுந்த ஆதாரங்களோடு நாம் பார்ப்போம். 
 
“தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் – பழங்கற்கால கற்கோடரிகள் 15,00,000 – (1.51 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை ! “
“கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி!”

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்னும் புவித் தரைத்தோற்ற வியலாளர் பல்லாவரம் அருகே தரையில் கிடந்த ஒரு கல்லாலான கருவியைக் கண்டெடுத்தார். இது பின்னர் வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது. இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும். 


சென்னை பல்லாபுரத்தைத் தொடர்ந்து (பல்லாவரம்) பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப் படுகைகளிலும், குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர் ராபர்ட் புருசு பூஃட் (இந்திய பழங்கற்கால ஆய்வின் தந்தை) அறிவித்தார். 

 
சென்னையில் இருந்து சுமார் 60 கி.மி தொலைவில் உள்ள திருவள்ளூரில் இருக்கும் இந்த அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை . ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது. மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல. உலகிலேயே  வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் “Early Pleistocene presence of Acheulian hominins in South India” என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார். 
 
இந்த விடயத்தை அறிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஆய்வுகள் குறித்த மேலும் பல தகவல்களைப் பெற அங்கு விரைந்தார்கள் ஆனால் அங்கு விசாரித்ததில் இப்படி ஒரு ஆய்வு நடக்கிறது என்பது அந்த கிராம மக்கள் யாருக்குமே  தெரியாதது வருத்தமளித்தது. மேலும் இரு சக்கர வாகனம் கூட பயனிக்க முடியாத அந்த காட்டிலும் நடந்து சென்று விடயம் தெரிந்த ஓரிருவரிடம் வழி கேட்டுச் சென்றும் அந்த இடத்தை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். அதன் பிறகு இந்த ஆய்வுகளை எடுத்து நடத்தும் நிறுவனத்திடம் விசாரித்த போது. இந்த ஆய்வுகள் நடத்துவது நிறுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆனது என்றார். ஆவலுடன் அவர்கள்  ஏன் என்று கேட்ட போது மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று அந்த  நிறுவனம் கூறியது அதிர்ச்சி அளித்தது!. 
 
 இன்னும் எத்தனை இரகசியங்கள் இப்படி இருளில் மூழ்கியதோ. 
  Thanks To History Page.

மஹா லக்ஷ்மியே வருக, வருக.

lakshmi

மத்தளம் கொட்டிட வருக, வருக
மனிசங்கு முழங்கிட வருக, வருக
மணிவீனை இசைத்திட வருக, வருக
மஹா லக்ஷ்மியே வருக, வருக.

 நவராத்திரியில் முதல் மூன்று நாள் துர்க்கைக்கு. அடுத்த மூன்று நாள் அதாவது இன்றிலிருந்து லக்ஷ்மி தாயாருக்கு. உலகெங்கிலும் ஊழல் வாதிகள் தண்டிக்கப்பட்டு இந்தியா மட்டுமல்லாது சோமாலியா, எத்தியோப்பியா என அனைத்து நாடுகளின் வறுமையும் நீங்கி கத்தார், பஹ்ரைன் போல் செல்வ செழிப்பாக ஆக நாம் எல்லாம்வல்ல லக்ஷ்மி தாயாரை பிராத்திப்போம்.

MAHA MRUTHYUNJAYA BEEJA MANTHRAM. Meaning Word by Word

mrityunjeya

MAHA MRUTHYUNJAYA BEEJA MANTHRAM

We all either know or have heard about Maha Mruthyunjaya Mantra:

ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्
(oṁ tryambakaṁ yajāmahe sugandhiṁ puṣṭi-vardhanam ǀurvārukam-iva bandhanānmṛtyormukṣīya māmṛtāt ǁ)

meaning word by word:

ॐ oṁ = is a sacred/mystical syllable in Sanatan Dharma or hindu religions, i.e. Hinduism, Jainism, Buddhism.
त्र्यम्बकम् tryambakam = the three-eyed one (accusative case), त्रि + अम्बकम् = tri + ambakam = three + eye
यजामहे yajāmahe = We worship, adore, honour, revere,
सुगन्धिम् sugandhim = sweet smelling, fragrant (accusative case),
पुष्टि puṣṭi = A well-nourished condition, thriving, prosperous, fullness of life,
वर्धनम् vardhanam = One who nourishes, strengthens, causes to increase (in health, wealth, well-being); who gladdens, exhilarates, and
restores health; a good gardener,
पुष्टि: वर्धते अनेन तत् = puṣṭiḥ vardhate anena tat (samas)= The one who nourishes someone else and gives his life
fullness.
उर्वारुकमिव urvārukamiva = like the cucumber or melon
मृत्यु: + मुक्षीय = mṛtyuḥ + mukṣīya= from death + free (Vedic usage)
मा ∫ मृतात् mā ∫ mṛtāt = (give) me immortality, emancipation

The Maha Mruthyunjaya Manthra is known as Death conquering manthra. Thriyambaka Manthra ( Rigveda (RV 7.59.12) & Yajurveda (TS 1.8.6.i; VS 3.60) Thriyambaka refers to the 3 eyed Lord Siva, also known as Rudra, who is known as Kaalakalaya (one who brought death, to death himself).

In some Hindu religious books the complete mantra is preceded by oṁ hrauṁ jūṁ saḥ / oṁ bhūrbhuvaḥ svaḥ and followed by oṁ svaḥ bhuvaḥ bhūr / oṁ saḥ jūṁ hrauṁ oṁ, which is its Tantric version.

Maha Mrityunjaya Bija Mantram is the powerful mantra of Lord Shiva. It is just a single line mantra. Chanting this mantra 21 times will invoke Lord Shiva, the great conqueror of death. By chanting Maha Mrityunjaya Beeja Mantra you can gain good health and prevent untimely death.

Another version of Mrityunjaya Mantra is the Tryambakam Mantra. One can also chant both the mantras at the same time to appease Lord Shiva.

There are at least two versions of the Tryambakam mantra found in the Rudrashtadhyayi and in the Shukla/Krishna Yajur Veda. The versions are similar with variation in a few syllables: oṁ tryambakaṁ yajāmahe sugandhiṁ pativedanam, urvārukam-iva bandhanānmṛtyormukṣīya māmutaḥ.

“Om Jum Sah” == the Mahamrityunjaya bīja mantra.
‘disease’. But urva (उर्वा) does not mean ‘vishal’ in Sanskrit; rather it is cognate with the Hindi word oorva (ऊर्वा); so this translation is not correct.

Note: Here are two possible combinations)

मा + अमृतात् = mā + amṛtāt = not + immortality, nectarTranslation would be: (Free me from death but) not from immortality.
मा (माम) + अमृतात् = mā (short form of mām) + amṛtāt = myself + sure, definitelyTranslation would be: Free
me from certain death.
Meaning:

(OM. We worship the Three-eyed Lord who is fragrant and who nourishes and nurtures all beings. As is the ripened cucumber (with the intervention of the gardener) is freed from its bondage (to the creeper), may he liberate us from death for the sake of immortalit)

The Maha Mrityunjaya Mantra was found by Rishi Markandeya. It was a secret mantra, and Rishi Markandeya was the only one in the world who knew this mantra. The Moon was once in trouble, cursed by King Daksha. Rishi Markandeya gave the Mahamritryunjaya Mantra to Sati, Daksha’s daughter, for the Moon. According to another version this is the Bija mantra as revealed to Rishi Kahola that was given by Lord Shiva to sage Sukracharya, who taught it to Rishi Dadicha, who gave it to King Kshuva, through whom it reached the Shiva Purana.

It is also called the Rudra mantra, referring to the furious aspect of Lord Shiva; the Tryambakam mantra, alluding to Shiva’s three eyes; and it is sometimes known as the Mrita-Sanjivini mantra because it is a component of the “life-restoring” practice given to the primordial sage Sukracharya after he had completed an exhausting period of austerity. Its Devata is Rudra or Lord Shiva in his fiercest and most destructive roopa or aspect. In the Vedas it finds its place in three texts – a) the Rig veda VII.59.12, b) the Yajur Veda III.60, and c) the Atharva Veda XIV.1.17.

It is said to be beneficial for mental, emotional and physical health and to be a moksha mantra which bestows longevity and immortality.
The Mahamrityunjaya Mantra has been used by many Rishis as well as Sati during the time when Chandra suffered from the curse of Prajapati Daksha. By reciting this mantra, the effect of the curse of Daksha, which could make him die, and Shiva then took Chandra and placed it upon his head.

This mantra is addressed to Lord Shiva for warding off untimely death. It is also chanted while smearing Vibhuti over various parts of the Body and utilised in Japa or Homa (havan) to get desired results. While its energy protects and guides the initiates a mantra re-links consciousness to its deeper and more abiding nature and repetition of the mantra constitutes Japa, the practice of which develops concentration that leads to a transformation of awareness. Whereas the Gayatri Mantra is meant for purification and spiritual guidance, the Mahamrityunjaya Mantra is meant for healing rejuvenation and nurturance.

Thanks To Krishnan Sivan Sir.

ஹரியும் அறணுமே இந்த மூடர்களை திருத்த வேண்டும்

perumal

திருவேங்கடம் என்னும் திருப்பதி. 12 ஆழ்வார்களில் தொண்டரடி பொடியாழ்வார், மதுரக்கவியாழ்வார் தவிர ஏனைய 10 ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் திருப்பதி. முருக பக்தரான அருணகிரி நாதரோ பச்சைப்புயல் மெச்சத்தகு மறுகோனே, மாலுக்கு இனிய மறுகோனே என்று பல திருப்புகழ் பாக்களில் முருகனை பாடுவதோடு மாலையும் சேர்த்தே பாடுகிறார். அருணகிரி நாதரின் முதல் திருப்புகழான முத்தைத்தறு திருப்புகழில்

பத்துத் தலை தத்தக் கணை தொடு ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒரு நாளே  என்கிறார். இதன் பொருள்.

பத்துத் தலை தத்த = (இராவணனுடைய) பத்து தலைகளும் சிதறும்படி.

கணை தொ(ட்)டு = அம்பைச் செலுத்தியும்.

ஒற்றைக் கிரி மத்தை = ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை மத்தாக நட்டு.பொருது = (கடலைக்) கடைந்தும்.

ஒரு பட்டப்பகல் = ஒரு பட்டப் பகலை.

வட்ட = வட்ட வடிவமாக உள்ள.

திகிரியில் = சக்கரத்தினால்.                        இரவாக = இரவாகச் செய்தும்.

பத்தற்கு இரதத்தைக் கடவிய = பத்தனாகிய அருச்சுனனுடைய தேரைப் பாகனாகஇருந்த நடத்திய.

பச்சைப் புயல் = பச்சை மேகம் போல் நிறமுடைய திருமால்.

மெச்சத் தகு பொருள் = மெச்சத் தகுந்த பொருளே.

பட்சத்தொடு = (என் மீது) அன்பு வைத்து.

ரட்சித்து அருள்வதும் = (என்னைக்) காத்தருளும்.

அருள்வதும். ஒரு நாளே = ஒரு நல்ல நாளும் உண்டாகுமா?

அதுமட்டுமல்ல. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சிலப்பதிகாரம் திருவேங்கடம் பற்றியும், திருப்பதி  பற்றியும் செப்புவதை  கேளுங்கள்.

வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும். 

 உயர்ந்த மலை உச்சியிலிருந்து அருவி நீர் கொட்டிக்கொண்டிருக்க. சூரியனும், சந்திரனும் எதிரெதிரே எழுந்து நிற்க இடைப்பட்ட இம்மலையில் மின்னலை ஆடையாக உடுத்திக்கொண்டு ஓடி நீலமேகம் நிற்பது போல் எழுந்தருளி பகைவெல்லும் ஆழியும், பால் நிறம் போன்று சங்கும்,  இருபுறமும் திகழ தாமரையைக் கரத்தில் ஏந்தி,  கிளர்ந்தெழும் ஆரத்தை மார்பில் பூண்டு,  தூய பட்டாடை உடுத்தி செங்கண் நெடியோன் நிற்கிறார் என்கிறார் இளங்கோவடிகள். 

  இதை தவிர்த்து பல சங்க இலக்கியங்களில் திருமலையில் கொலுவீ ற்றிறுப்பது சாட்ஷாத் கோவிந்த ராஜனே என்று சொல்ல வேலை, வெட்டி இல்லாத சிலர் இதற்க்கு முன் அது முருகன் கோவில், அம்மன் கோவில் என்று புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டனர். இந்த மாதம் 20ம் தேதி ஒரு வெண்ணை திருப்பதியில் இருப்பது உண்மையில் முருகனாம். இதைக்கூட பொறுத்து கொள்ளலாம். ஆனால்? பத்து ஆழ்வார்கள் திருப்பதி பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்க. ஒரு ஆழ்வார்களால் கூட திருப்பதி பெருமாள் மங்களாசாசனம்  ெய்யப்படவில்லை என்று  அந்த பதிவில், வெண்ணை உளற 1300க்கும் மேற்பட்ட  கேனைகள் அதற்க்கு லைக், 4300க்கும் மேல் share.  அந்த வெண்ணையின் பதிவை ஒரு தொண்ணை coppy, பேஸ்ட் பண்ணி வேறு போட்டது. ஹிந்து மதத்தை இழிவுபடுத்த நாஸ்திகவாதிகளோ, பிற மதத்தினரோ தேவையில்லை. இதுபோன்ற ஹிந்து மதத்தில் உள்ள முட்டாள்களே போதும். உண்மை ஆன்மீக வாதிக்கு ஹரியும், சிவனும் மட்டுமல்ல. ராம், ரஹீம், கிருஷ்ணர், கிருஸ்த்து அனைத்துமே ஒன்று தான். 

ரிக் வேதம்-  ஏகம் சத் விரோ பஹுதா வதந்தி” (ஒரு கடவுளை அறிந்தவர்கள் அவரவர் அனுபவத்திகு ஏற்ப சொல்கிறார்கள்.]

ஹரியும் அறணுமே இந்த மூடர்களை திருத்த வேண்டும்

இன்று வீர திருமகன் பகத் சிங்கத்தின் பிறந்த தினம்.

bagath singh

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதினிலே நிற்பவர் யார். மாபெரும் வீரர், மானம் காப்போர் சரித்திரம் தன்னில் நிற்கின்றார். இன்று வீர திருமகன் பகத் சிங்கத்தின் பிறந்த தினம்.

 
இவர் இறை நம்பிக்கை இல்லாதவர் என்றாலும் இறைவன் இவரது ஆத்மாவை நல்ல நிலையில் தான் வெய்த்து இருப்பார். காரணம் இவர் இறை விக்கிரகங்களை உடைத்து விபூதி, குங்குமம், நாமம்  ஆகிய சமய சின்னங்களை நாக்கால்  நக்கி அழித்து போன்ற கீழ் தரமான வேலைகளை செய்யவில்லை. ஆனால்? மூச்சுக்கு முன்னூறு முறை அகிம்சை பற்றி பேசி, ராம நாமத்தை மூச்சுக்கு மூவாயிரம் முறை ஜெபித்து இந்த பகத் சிங்கை தூக்கில் போடுவதற்கு எதிராக எதுவுமே செய்யாமல் மேலும் அதை வரவேற்ற போலி அகிம்சாவாதி துராத்மாவின் ஆத்மா இன்று எந்த நிலையில் இருக்கும். நம்மை அடித்த வெள்ளையனிடம் காட்டும் அகிம்சையை திருப்பி அடிக்கும் இந்தியனிடம் காட்டாது இருப்பதற்கு பேர் தான் அகிம்சையா?

நலன்கள் பல அருளும் நவ துர்கை வழிபாடு

துர்க்கை வழிபாட்டில் நவதுர்க்கை வழிபாடு பிரசித்தமானது. நவ துர்க்கைகளையும் வெவ்வேறு வடிவங்களில், பெயர்களில், குறிப்பிடுகிறார்கள்.
சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாந்தா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்திரி, மஹாகௌரி, சித்திதாத்ரி, என்ற நவ வடிவங்களாகவும்,வனதுர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, ஜ்வாலா துர்கை, லவண துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை, என்று மற்றொரு வகை நவ வடிவங்களாகவும், நவதுர்கா தேவியர் அறியப்படுகிறார்கள்.
 ஓம் சக்தி. nava durgai

ஆசை படுதலை பற்றி நமது மதம் என்ன? சொல்கிறது.

nataraja rankanathan

ஆசை படுதலை பற்றி நமது மதம் என்ன? சொல்கிறது.

ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று சொன்ன அக்காலத்து ஞானிகளுக்கும், அனைத்திற்கும் ஆசைப்படு என்று சொல்லும் இக்காலத்தை சேர்ந்த துறவிகளுக்கும் என்ன? வித்யாசம் என்று என்னை ஒரு நண்பர் இப்பொழுது கேட்டார். இதே கேள்வியை பலர் கேட்டு விட்டனர். நானும் அலுக்காமல் பதில் சொல்லி கொண்டு இருக்கிறேன். உண்மையில் நமது ஹிந்து மதம் நியாயமான விடயங்களுக்கு கூட ஆசைப்படுவது தவறு என்று சொல்கிறதா. ஹிந்து மதத்தில் இரண்டு பெரும் பிரிவுகாளான சைவமும், வைணவமும் ஆசை பற்றி என்ன? சொல்கிறது.

நாவுக்கரசர்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறார்.

தொண்டரடி பொடி ஆழ்வார்

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறார். ஆசையை துறக்க வேண்டும் என்று நினைப்பதும் ஒருவித ஆசை தான்.
இறைவனின் அருளை நாம் அடைய வேண்டும் என்று நினைப்பதும் ஒருவித ஆசைதான். ஒரு மனிதனுடைய நியாயமான
ஆசைகள்  இஷ்ட்ட, காமியார்தங்கள் நிறைவேற வேத மந்திரங்கள், ஸ்லோகங்கள் இருக்கிறது. ஆசைப்படுவது தவறாக
இருந்தால் நமது முன்னோர்கள் அதை நிறைவேற்ற எதற்க்கு? இவற்றையெல்லாம் ஏற்படுத்த வேண்டும். நம்முடைய ஆசை நியாயமான ஆசையாக இருக்க வேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் முது மொழிக்கு ஏற்ப்ப நான் உலகிலேயே No1 கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று நினைத்தாலும் தவறு இல்லை. அதற்கான சரியான திட்டமிடலை, நியாயமான வழிமுறைகளை பின்பற்றி செய்ய வேண்டும். கோவில் கட்டுவதாக இருந்தாலும்,காந்திக்கு மண்டபம் கட்டுவதாக இருந்தாலும் பணம் இல்லாமல் முடியாது.

இந்த பணம் பற்றி ராமகிருஷ்ண பரம ஹம்சர் சொல்வது. கப்பலை சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்துள்ள கடல் நீர் அளவு கூட
உன்னிடம் பணம் இருக்கலாம். ஆனால்?உன்னை சுற்றி உள்ள பணம் உன் மனதினுள் புகாமல் நீ பார்த்து கொள்ள
வேண்டும். உன்னுள் பணம். அதாவது பணத்திமிர் புகுந்தால் ஓட்டை கப்பல் மூழ்குவதை போல் உன் வாழ்க்கை
மூழ்கி விடும். என்ன? அழகான விளக்கம் பாருங்கள்.
அனைத்து நியாயமான விடயங்களுக்கும் ஆசைபடுங்கள். தவறே இல்லை.